மறைமலைநகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் மண்டல இயக்குனர் ஆய்வு

மறைமலைநகர் நகராட்சி தாழ்வான பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதியையும் ஆய்வு மேற்கொண்டார்.
மறைமலைநகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் மண்டல இயக்குனர் ஆய்வு
Published on: 
Summary

கால்வாய்கள் வடிகால்வாய்கள் மேலும் திறந்தவெளி பெரிய கால்வாய்களை முற்றிலுமாக தூர்வாரப்பட்டதா என்றும் மேலும் சாலையை சுற்றி செடி, கொடி, புதர்களை அகற்றுவதையும் மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையையொட்டி மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஆகிய பகுதிகளில் செங்கல்பட்டு மண்டல இயக்குனர் மாரிச்செல்வி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மறைமலைநகர் நகராட்சி

அப்போது மறைமலைநகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையத்தையும், மேலும் தாழ்வான பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதியையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மறைமலைநகர் நகராட்சி நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் லதா, கூடுவாஞ்சேரி பொறியாளர் கோவிந்தராஜன் உடன் இருந்தனர்.

கூடுவாஞ்சேரி

அதனைத் தொடர்ந்து நந்திவரம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி, ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் நகர், உதயசூரியன் நகர், மீனாட்சி நகர், அருள் நகர், பிரியா ஆகிய பகுதிகளில் கால்வாய்கள் வடிகால்வாய்கள் மேலும் திறந்தவெளி பெரிய கால்வாய்களை முற்றிலுமாக தூர்வாரப்பட்டதா என்றும் மேலும் சாலையை சுற்றி செடி, கொடி, புதர்களை அகற்றுவதையும் மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com