

சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி (வயது35). நேற்றுஇரவு அவர் ஆர்.கே.பேட்டை அடுத்த அயன் ஏரி கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவரது வீட்டில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இளம்பெண் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றபோது அருள்பாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர். நேற்று இரவு அருள்பாண்டி, இளம்பெண்ணை தனிமையில் சந்திக்க வந்தபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பழகுவதை நிறுத்துமாறு இளம்பெண் கூறி கண்டித்ததாக தெரிகிறது.
இதில் மனவேதனை அடைந்த அருள்பாண்டி, இளம்பெண்ணின் வீட்டிலேயே புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இளம்பெண்ணின் வீட்டிற்கு அருள்பாண்டியன் எதற்காக வந்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.