அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த இளம்பெண் உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியல்

காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக புகார் அளிக்கவும் அதற்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த இளம்பெண் உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியல்
Published on: 
Summary

பிரசவமான சில நாட்களிலேயே இளம்பெண் உயிரிழந்ததால் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனைக்குள் வினிதாவின் உடலை வைத்து மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பழனியாபுரத்தை சேர்ந்தவர் பழனிராஜன். பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினிதா (வயது 25). இவர்களுக்கு ஏற்கனவே முதல் பெண் குழந்தை உள்ள நிலையில் வினிதா மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

வெள்ளிக்கிழமை

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரசவத்திற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லாததால் அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலக்குறைவுடன் இருந்த வினிதா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

திருமங்கலம்

இந்நிலையில் இன்று காலை திடீரென மயக்கமடைந்த வினிதாவை உறவினர்கள் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கொண்டு வந்த சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மருத்துவமனை முன் போராட்டம்

பிரசவமான சில நாட்களிலேயே இளம்பெண் உயிரிழந்ததால் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனைக்குள் வினிதாவின் உடலை வைத்து மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் உரிய பதில் அளிக்காததால் வினிதாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டு உயிரிழப்புக்கான காரணத்தை தெரிவிக்கக் கோரியும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக புகார் அளிக்கவும் அதற்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதுகுறித்து தலைமை மருத்துவர் கூறியதாவது கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை அன்று அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ஒரு வாரம் அவர்களுக்கு உரிய மருத்துவம் செய்து நேற்று நல்ல நிலையில் இருந்த போது வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை திடீரென மயக்கம் அடைந்ததாக உறவினர்கள் கொண்டு வந்தனர். வந்தவுடன் சிகிச்சை செய்ய வந்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com