சுவர் ஏறி குதித்து உள்ளாடையை திருட முயன்ற வாலிபர்

உடுமலை பகுதியில் உள்ள வீடுகளில் திருடு போகும் பொருட்கள் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுவர் ஏறி குதித்து உள்ளாடையை திருட முயன்ற வாலிபர்
Published on: 
Summary

உடுமலை அய்யலு மீனாட்சி நகர் பகுதியில் ஒருவன் “ரிஸ்க்” எடுத்து சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று செருப்பு மற்றும் உள்ளாடைகளை திருடமுயற்சி.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அய்யலு மீனாட்சி நகர், காந்தி நகர், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளில் சுவர் ஏறி குதித்து கைக்கு கிடைக்கும் பொருட்களை எடுத்து செல்லும் மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

பணம் திருட்டு, நகை திருட்டு, போன் திருட்டு, வாகனங்கள் திருட்டு என்று ஆள் இல்லாத வீடுகள் மற்றும் இரவு நேரங்களில் உயிரை பணயம் வைத்து உள்ளே புகுந்து திருடிச் செல்வதை கேள்விப் பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உடுமலை பகுதியில் உள்ள வீடுகளில் திருடு போகும் பொருட்கள் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடுமலை

உடுமலை அய்யலு மீனாட்சி நகர் பகுதியில் ஒருவன் “ரிஸ்க்” எடுத்து சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று செருப்பு மற்றும் உள்ளாடைகளை திருடமுயற்சித்து உள்ளாடை அளவு ஒத்துபோகாததால் அங்கேயே வீசி எறிந்துவிட்டு சாவகாசமாய் மீண்டும் சுவர் ஏறி குதித்து வீடுகளை நோட்டமிட்டவாறு செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

உள்ளாடை

இது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு சிறு சிறு திருட்டுசம்பவங்கள் நடந்துவந்த நிலையில் உள்ளாடைகளை திருட ரிஸ்க் எடுத்த மர்மநபரின் சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது உடுமலை மக்களுக்கு காமெடி கலந்த ஒரு கலக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com