உடல்நலக் குறைவால் எழுத்தாளர் ரா.முருகன் காலமானார்

சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன.
Writer Ra. Murugan
Published on: 

தமிழ் இலக்கியத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புனைவு, அபுனைவு நூல்களை எழுதி வந்தவர் எழுத்தாளர் இரா. முருகன் (74). நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல வகை எழுத்திலும் தொடர்சியாக பங்களிப்பைச் செய்து வந்தவர் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

பத்திரிக்கை துறையில் பங்களிப்பு

1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலக பயணமானது தொடங்கியது. கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவர் எழுதி வந்துள்ளார்.

சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன.இவர் எழுதிய அரசூர் வம்சம் புதினம் ஆங்கிலத்தில் கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது.

இவர் ஆனந்தவிகடனில் எழுதிய 'உலகே உலகே உடனே வா' தமிழில் முதல் branded column ஆகும். மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

திரைப்படங்களுக்கு வசனம்

கமல் ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ (2009) திரைப்படத்துக்கான வசனம் எழுதியுள்ளார். அஜீத் குமார் நடிக்கும் பில்லா 2 (2011) திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.இவர் எழுதிய ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘ரெட்டைத் தெரு’ (2010) குறும்படத்தில் நடிகராகவும் திரையில் தோன்றியிருக்கிறார்

விருதுகள்

இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு (சிறந்த சிறுகதை), கதா விருது (சிறுகதை), பாரதியார் பல்கலைக் கழக விருது (நாவல்) போன்ற பல பரிசுகள் இவருடைய படைப்புகளுக்காகப் பெற்றிருக்கிறார் . 10 க்கும் மேற்ப்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரபலமான தமிழக வீரர் அஸ்வின் முருகன் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

X