சிக்கன் பர்கரில் புழு? - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

உணவில் புழுக்கள் நெளிந்ததை பார்த்த வாடிக்கையாளர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
சிக்கன் பர்கரில் புழு? - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
Published on

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் வாங்கிய சிக்கன் பர்கரில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உணவில் புழுக்கள் நெளிந்ததை பார்த்த வாடிக்கையாளர்கள் அதை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

இந்த வீடியோ நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com