தாம்பரம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
Published on: 
Summary

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தாம்பரம் மாநகராட்சி 5-வது மண்டலத்தில் 350-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் பல ஆண்டுகாலமாக பணி செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் 5-மண்டலங்களில் 4 மண்டலங்களில் மட்டும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிசெய்ய தனியாரிடம் ஒப்பந்தம் கோரிய நிலையில் 5-வது மண்டலத்தில் மட்டும் ஒப்பந்தம் கோரவில்லை என்று தெரிகிறது. இங்கு தாம்பரம் மாநகராட்சி முழுவதிலும் உள்ள நிரந்தர தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை கிழக்கு தாம்பரம் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையில் சாலை திரண்டனர். அவர்கள் 5-வது மண்டலத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முகுந்த் வரதராஜன் சாலை, தாம்பரம் மேம்பாலம், ஜி.எஸ்.டி சாலை வழியாக பேரணியாக சென்றனர். பின்னர் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

X