

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்–பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஓட்டல் எதிரில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திலோசன் (வயது30) என்பவர் கடந்த ஒரு வருடமாக லிப்ட் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு பணிமுடிந்து திலோசன் 7-வது தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த திலோசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர் இறந்தது மற்ற தொழிலாளிகளுக்கு தெரிய வில்லை. இன்று காலை வழக்கம் போல் கட்டுமான வேலைக்கு தொழிலாளர்கள் வந்த போதுதான் திலோசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கிண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்–பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திலோசன் தூக்கத்தில் தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.