தோல் கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி பிணமாக மீட்பு

தனியார் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் வாலிபர், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூவரசன்
பூவரசன்
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குடியரசு. இவரது மகன் ஐசக் என்கிற பூவரசன் (வயது27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.

பூவரசன் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் தோல் பதனிடும் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுத்திகரிப்பு நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.

சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள்

இந்த நிலையில், இன்று காலை பூவரசன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் பிணமாக மிதந்தார். வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் தொட்டியில் பூவரசன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், இந்த தகவலை அறிந்த பூவரசனின் உறவினர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் சுத்திகரிப்பு நிலைய வாயிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

பூவரசன் கண்காணிப்பு பணியின் போது, கழிவுநீர் தொட்டியில் எதிர்பாரா விதமாக தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் வாலிபர், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X