பர்லியார் அருகே ஆபத்தான பாறைகள் அகற்றும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்ட எல்லை பகுதிக்குட்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தாலும், கோவை மாவட்ட எல்லை பகுதியில் தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.
பர்லியார் அருகே ஆபத்தான பாறைகள் அகற்றும் பணி தீவிரம்
Published on: 
Summary

அரசு பஸ் விபத்துக்குள்ளான பகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள பாறைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் கடந்த 23-ந்தேதி இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து ரத்து

மேலும் பர்லியார் பகுதியில் மண் சரிந்து அரசு பஸ் மீது விழுந்ததில் பஸ் டிரைவர் ஜனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இதையடுத்து அந்த பகுதியில் புவியியல் துறை நிபுணர் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஆபத்தான பாறைகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முதல் குன்னூரில் இருந்து பர்லியார் வரை அரசு பஸ் இயக்கப்பட்டது.

பாறைகள் அகற்றம்

மேலும் அரசு பஸ் விபத்துக்குள்ளான பகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள பாறைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்ட எல்லை பகுதிக்குட்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தாலும், கோவை மாவட்ட எல்லை பகுதியில் தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் இணைந்து ஓரிரு நாட்களில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X