கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது- வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் பங்கேற்பு

பல்வேறு சுவைகளில கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன
கிறிஸ்துமஸ் கேக்
கிறிஸ்துமஸ் கேக்
Published on: 
Summary

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கேக் தயாரிப்புக்கான கலவை பணி தொடங்கியுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கேக் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது பேதமின்றி கேக்கை விரும்புவார்கள். குறிப்பாக, கிறிஸ்துமஸ் அன்று தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் கேக்கை வழங்குவார்கள்.

கேக் கலவை

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கேக் தயாரிப்புக்கான கலவை பணி தொடங்கியுள்ளது. ஊட்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த கேக் தயாரிப்பு நிகழ்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள், ஓட்டல் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி சமையல் கலைஞர்கள் கூறுகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் கேக் மிக்ஸிங் திருவிழா ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் வாழ்ந்த ஆங்கிலேயர்களால் இந்த பாரம்பரியம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவையில் தயாரிப்பு

தற்போது பல்வேறு சுவைகளில கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சுமார் 100 கிலோ உலர் பழங்கள், தேன், மது மற்றும் முந்திரி வகைகள் கலந்து ஒரு மாதம் பதப்படுத்தப்பட்டு 400 கிலோவுக்கும் மேற்பட்ட கேக்குகள் தயாரிக்கப்பட உள்ளது என்றனர்.

இதேபோல கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கேக் தயாரிப்பு பணி விமரிசையாக தொடங்கி நடந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் கூறுகையில்

கேக் தயாரிக்கும் கலவையுடன் முந்திரி, பாதாம் செதில்கள், பிஸ்டாச்சியோ, அத்திப்பழம், உலர்ந்த உப்பு, இலவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவை சேர்க்கப்பட்டன. இந்த கேக் கலவை 1 டன் எடை வரும் வரை கலக்கப்பட்டது. இந்த கலவை கிறிஸ்துமஸ் வரை காற்று புகாத வகையில் அடைத்து வைத்து கேக் தயாரிக்கப்படும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com