வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்ல உள்ளனர்.ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களும் கொடுத்து அனுப்புவர்.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி தீவிரம்
Published on

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது.

நாளை காலை வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்ல உள்ளனர்.

அவற்றுடன் அந்தந்த வாக்குசாவடியில் பணி செய்யும் அலுவலர்களும் உடன் செல்வார்கள். அவர்களிடம், ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களும் கொடுத்து அனுப்புவர். அதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 238 ஓட்டுச்சாவடிக்கும் தனித்தனியே பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறு, நூல், சீல் வைக்கத் தேவையான பொருட்கள், ஓட்டுப்பெட்டிகளை மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக அட்டை என 81 வகையான பொருட்களை சாக்கிலும், பெரிய டிரம்மிலும் போட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com