திருமணமான ஒரு வருடத்தில் காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்

கொலை செய்யப்பட்ட ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருமணமான ஒரு வருடத்தில் காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்
Published on: 
Summary

காதல் திருமணம் செய்த ஒரே வருடத்தில் நடத்தையில் சந்தேகத்–தால் மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஸ்வேதா (வயது26). இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

காதல் திருமணம்

இவருக்கும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த அஜித்குமார் (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்–ளது. டிரைவராக வேலை பார்த்து வந்த அஜித்குமாரும் ஸ்வேதாவும் நாளடை–வில் காதலிக்க தொடங்கினர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதனையும் மீறி இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சில மாதம் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் மீண்டும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

நடத்தையில் சந்தேகம்

இதனால் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஸ்வேதா சமூக வலைதளங்களில் வெவ்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் அஜித்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து பிரச்சினை நிலவி வந்த நிலையில் தீபாவளி பண்டிகைைய கொண்டாடுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித்குமார் தனது மனைவியை பார்க்க வந்துள்ளார். அப்போது மனைவியின் செல்போனை பார்த்து மீண்டும் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டுள்–ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியது. இன்று காலை ஸ்வேதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிய அஜித்குமார் எரியோடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்–பட்ட ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

காதல் திருமணம் செய்த ஒரே வருடத்தில் நடத்தையில் சந்தேகத்–தால் மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X