ஈரோடு அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண் பலி

உயிரிழந்த காந்திமதியின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நேரில் ஆய்வு செய்து,கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்
Published on: 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த 39 வயதான 7 மாத கர்ப்பிணியான காந்திமதிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, முதலில் தனியார் மருத்துவ மனையிலும் பின்னர் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட சோதனையில் காந்திமதிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டெங்கு காய்ச்சல்

இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் காந்திமதி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறும்போது:-

உயிரிழந்த காந்திமதியின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நேரில் ஆய்வு செய்து,கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும்,டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

X