குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த பெண் காட்டு யானை சேற்றில் சிக்கி தவிப்பு

யானை, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம், வனவிலங்குகள் தண்ணீருக்காக இந்த அணையையே நம்பி வாழுகின்றன.
சேற்றில் சிக்கிய யானையை படத்தில் காணலாம்.
சேற்றில் சிக்கிய யானையை படத்தில் காணலாம்.
Published on: 

டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணையானது 42-அடி கன கொள்ளளவு கொண்டது.

நீர்பிடிப்பு மலைப்பகுதிகளான, குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்மனூர், கடம்பூர் போன்ற பகுதிகளில் பெய்யும் மழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து உண்டாகிறது.

யானை, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம், வனவிலங்குகள் தண்ணீருக்காக இந்த அணையையே நம்பி வாழுகின்றன.

சுற்றுலா பயணிகள்

மீன்கள் வாங்கவும், தண்ணீர் குடிப்பதை காண சுற்றுலா பயணிகள் வந்து தூரத்தில் நின்று போட்டோ வீடியோவும் எடுத்து செல்வர்.

கடந்த சில மாதங்களாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் குறைந்து ஆங்காங்கே குட்டை போல் காணப்படுகிறது, போதுமான மழை இல்லாததால் தண்ணீர் குறைந்து அணையின் எல்லை பகுதிகளை சுற்றிலும் ஆங்காங்கே சேறும் சகதியுமாக உள்ளது.

அணை

இந்த நிலையில் நேற்று இரவு அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த பெண் காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கிக்கொண்டு, அங்கிருந்து நகர முடியாமல் அவதிப்பட்டு வந்தது. குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்த சிலர், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர், டாக்டர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழு, சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களின் உதவியுடன் கயிறு கட்டி, சேற்றில் சிக்கிய யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

யானை

ஒரு கட்டத்தில் சோர்வான யானை சேற்றில் படுத்துக் கொண்டது, மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜேசிபி சேற்றில் சிக்கியதால் அதை மீட்க மற்றொரு வாகனமும் கொண்டு வரப்பட்டது.

இதனால் மீட்கும் பணியில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிரைன் உதவியுடன் கயிறு கட்டி யானையை மீட்கும் முயற்சியிலும் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். யானை சேற்றில் இருந்து மீட்டு விடுவோம் என்று டி.என்.பாளையம் வனச்சரக அலுவலர் ஜான் பீட்டர் நம்பிக்கை தெரிவித்தார். தண்ணீர் குடிக்க வந்த யானை அணைப்பகுதியில் யானை சேற்றில் சிக்கிய தகவலறிந்து பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு காணப்படுகிறது. பொதுமக்கள் யாரும் அணை பகுதிக்கு வர வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com