ஊட்டி படகு இல்ல ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது ஏன்?- ஆய்வு நடத்த வலியுறுத்தல்

படகு இல்ல ஏரியில் ஒரே நாளில் ஏராளமான மீன்கள் உயிரிழந்து தண்ணீரில் மிதந்தது.
ஊட்டி படகு இல்ல ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது ஏன்?- ஆய்வு நடத்த வலியுறுத்தல்
Published on: 
Summary

ஊட்டி படகு இல்ல ஏரியில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா தலமான ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பார்வையிடும் முக்கிய இடங்களில் ஒன்றாக படகு இல்லம் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில காலமாக படகு இல்ல ஏரியில் ஆகாய தாமரை செடிகள் பரவலாக வளர்ந்து வருவதாகவும், அவற்றை ஆரம்ப நிலையிலேயே அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

மீன்கள் உயிரிழப்பு

இந்நிலையில் படகு இல்ல ஏரியில் நேற்று ஒரே நாளில் ஏராளமான மீன்கள் உயிரிழந்து தண்ணீரில் மிதந்தது. இதனால் ஏரியின் நீர்த்தரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆகாய தாமரை செடிகள் அதிகளவில் பரவியதன் காரணமாக நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதா? ஏரியில் மாசுபாடு அதிகரித்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மீன்கள் உயிரிழந்தனவா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆக்சிஜன் அளவு

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஏரியின் நீர் மாதிரிகளை சேகரித்து, கரைந்த ஆக்சிஜன் அளவு, நீரின் தரம் மற்றும் மாசுபாட்டின் தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மீன்களின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோரிக்கை

மேலும் ஊட்டி படகு இல்ல ஏரியில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X