

அரசின் நிறுவனமான ஆவின் பால் மற்றும் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எப்பொழுதும் வரவேற்புள்ளது.
கடந்த சில மாதங்களாக பால் பொருட்களின் தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு, மூலப் பொருட்கள் விலை அதிகரித்து வந்தது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பொருட்களுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யக்கூடிய 67 பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை (28-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.
உயர்த்தப்பட்ட பால் பொருட்களில் சிலவற்றின் விலை குறிப்பிடப்பட்டு உள்ளது. வெண்ணெய் 100 கிராம் ரூ.70, 500 கிராம் ரூ.320, நெய் ஒரு லிட்டர் ரூ.780 அரை லிட்டர் ரூ.400, 200 மில்லி ரூ.180, 100 மில்லி ரூ.95, 50 மில்லி ரூ.55 குலோப் ஜாமூன் 125 கிராம் ரூ.60, 250 கிராம் ரூ.115, ரசகுல்லா 100 கிராம் ரூ.50, 200 கிராம் ரூ.95.கோவா 100 கிராம் ரூ.60, 250 கிராம் ரூ.150, 500 கிராம் ரூ.280, பேரிச்சம் பழம் கோவா 100 கிராம் ரூ.65, 250 கிராம் ரூ.155, பிரிமியம் மில்க் கேக் 250 கிராம் ரூ.140, மைசூர்பாகு 250 கிராம் ரூ.160, அரை கிலோ ரூ.310, நெய் அல்வா 250 கிராம் ரூ.125, நட்ஸ் அல்வா 250 கிராம் ரூ.200 ,
காஜு பிஸ்தா ரோல் 250 கிராம் ரூ.340 காஜூ கத்திலி 250 கிராம் ரூ.250. மோர் 200 மில்லி 10 ரூபாய், மோர் பாட்டில் ரூ.14, பால் பவுடர் அரை கிலோ ரூ.220, ஒரு கிலோ ரூ.450, 200 மில்லி லஸ்ஸி ரூ.23.
தயிர் ஒரு கிலோ ரூ.70, அரை லிட்டர் ரூ.40, தயிர் ஸ்பெஷல் 200 கிராம் ரூ.33, தயிர் சாதாரண 200 கிராம் ரூ.21, சால்ட், கோகனட், கஸ்டர்ட், பட்டர் குக்கீஸ் வகைகள் ரூ.40 உயர்ந்து உள்ளது.
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,
* அதிகரிக்கும் உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டு பால் உபபொருட்களின் விலை குறைந்தளவில் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
* பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவன பொருட்களுடன் ஒப்பிடுகையில் ஆவின் உபபொருட்களின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.
* லாப நோக்கமின்றி உற்பத்தி செலவை ஈடு செய்யவும், சந்தையில் போட்டித்தன்மையை தொடர்ந்து நிலைநிறுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* விலை திருத்தம் மூலம் கிடைக்கும் 90%-க்கு அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்கள் நலனுக்காக வழங்கப்படும்.
* விலை திருத்தம் மூலம் உற்பத்தியாளர்கள் வருமானத்தை மேம்படுத்தி, கூட்டுறவு பால் கொள்முதல் கட்டமைப்பு வலுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.