“உங்களை வளர்த்துவிட்ட விஜயகாந்திடம் ஆசிப் பெறாதது ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் விஜய் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“உங்களை வளர்த்துவிட்ட விஜயகாந்திடம் ஆசிப் பெறாதது ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி!
Published on: 

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.

தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள், திருமாவளவன், சீமான், வைகோ, அன்புமணி ராமதாஸ் என தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து விஜய் வாழ்த்துப் பெற்றார். அவரின் இந்த செயல்பாட்டை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் வெற்றிப்பெற்றப் பின் தன்னை வளர்த்துவிட்ட தனது தந்தையான விஜய்காந்தின் நினைவிடத்தை வந்து விஜய் பார்க்காதது ஏன்? என தேமுதிகவின் முக்கியத் தலைவரும், விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

விஜய் முதலமைச்சர் ஆனபிறகு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சென்று சந்தித்தார். இன்றைய தேமுதிக தலைவர் பிரேமலதாவைப் பார்க்கவேண்டும். கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்றாரா? பெரியார் சமாதிக்கு சென்றார். விஜயகாந்தின் சமாதிக்கு சென்றாரா?

என்னைப் பார்க்கவேண்டாம், தேமுதிக அலுவலகம் வரவேண்டாம், பிரேமலதாவை பார்க்கவேண்டாம். உங்கள் அப்பாவை காணவில்லை என்று சட்டமன்றத்தில் விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினையே சென்று பார்த்தீர்கள் அல்லவா?

உங்களை வளர்த்த விஜயகாந்தை சென்று பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் விஜய் கட்சித் தலைவர்களை சந்தித்தபோது, அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்திருந்தது. அப்போது அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைமையாக இருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்த விஜய்யை, பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com