அதிமுக கொறடா யார்?- சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்

எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராக அங்கீகரிக்க வேண்டும்..
அதிமுக கொறடா யார்?- சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்
Published on

தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வரும் 16, 17ம் தேதிகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுவதாக கூறினார்.

புத்தாக்க பயிற்சி முகாமை தொடங்கி வைத்து முதலமைச்சர் விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

புதிய எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பழைய எம்எல்ஏக்களும் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக கொறடா யார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சபாநாயகர், அதிமுக கொறடா யார் என்பது 18ம் தேதிக்கு முன்னதாக தெரியவரும் என்றார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவினர் எழுத்துப்பூர்வமாக மனு அளிக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com