

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் 48 கேள்விகளைக் கேட்க அனுமதி கோரி ராகுல் காந்தி உள்ளிட்ட INDIA கூட்டணித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்த SIR மூலம் 13 கோடி வாக்காளர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக இந்தியா கூட்டணியின் குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே படிவம் 6-ல் திருத்தம் கொண்டு வர மற்ற இரண்டு தேர்தல் ஆணையரிடம் கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல் வெளியானது.
இதனால் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்தது. உச்சநீதிமன்றத்தையும் நாடியது. ஆனால் எந்த பயனும் இல்லை.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் 48 கேள்விகளைக் கேட்க அனுமதி கோரி ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் மூலம் பதில் பெற வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் SIR நடத்த முடிவு செய்தது யார்?
* இந்த முடிவுக்கு மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒப்புதல் அளித்தார்களா?
* தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதா?
* புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் Form 6 விண்ணப்பத்தில் மாற்றம் செய்தது யார்?
* ERONET மற்றும் ECINET மென்பொருட்களை மையப்படுத்தி கட்டுப்படுத்த முடிவு செய்தது யார்?
* வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன?
SIR தொடர்பான வழக்குகளை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. INDIA கூட்டணியின் 48 கேள்விகளுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.