காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது? அமைச்சர் காந்திராஜ் ஆய்வுகுறித்து இன்பதுரை கேள்வி!

இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர், காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை?
காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது? அமைச்சர் காந்திராஜ் ஆய்வுகுறித்து இன்பதுரை கேள்வி!
Published on: 

தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் காவல்நிலையம் ஒன்றிற்கு சென்று, அங்கு ஆய்வு நடத்துவது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோவை குறிப்பிட்டு, காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது? என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

இந்த போலீஸ் ஆய்வு வீடியோ போலியா? உண்மையா?

காவல்துறை முதலமைச்சர் வசம் இருக்கும்போது, கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அதுவும் நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து நாடக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

குறிப்பாக, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் மீது http://Cr.No.479/2024, http://Cr.No.140/2026 என இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை?

ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது?

Prakash Singh v. Union of India (2006) 8 SCC 1 வழக்கில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய காவல்துறையின் சுதந்திரமும், அரசியல் தலையீடற்ற செயல்பாடும், தவெக அரசின் ஆட்சியில் தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக்கப்படுகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

X