தமிழகத்தில் மதியம் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை?

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 26-ந்தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
Rain
Published on: 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 26-ந்தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வழை மழை பெய்ய உள்ள மாவட்டங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரத்தில் மதியம் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மதியம் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com