மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய்- ஆர்.எஸ்.பாரதி

இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய்- ஆர்.எஸ்.பாரதி
Published on

இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். விருதுநகர் பராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,"மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது தி.மு.க.-அ.தி.மு.க. ஆட்சி அமைக்க திட்டமிட்டது.

பா.ஜ.க.வின் முக்கிய தலைவர் ஒருவர் தி.மு.க-அ.தி.மு.க.வுக்கு கனெக்டிங் கால் செய்தார்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் எனக் கூறியதும் உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்தார்.

இதை எல்லாம் தெரிந்து கொண்டு தான் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசி இருக்க வேண்டும்.

கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஆதரவு தர உதயநிதி துடித்தார்" என்றார்.

இந்நிலையில், மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர்," மாணிக்கம் தாகூர் கூறுவது அப்பட்டமான பொய்.

காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள். தேர்தல் முடிவு வந்த பின்பு காங்கிரசாரை தவிர மற்ற அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வந்து சந்தித்தார்கள்.

தொலைபேசியில் கூட நன்றி தெரிவிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com