டெங்கு அறிகுறிகள் என்ன?

வாந்தி, குமட்டல், தோலில் சிவப்பு புள்ளிகள் ஆகியவை சாதாரண அறிகுறிகளாகும்.
டெங்கு அறிகுறிகள் என்ன?
Published on: 

காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி, உடல் வலி, மூட்டு வலி, எலும்பு வலி. இதனால் தான் இதை எலும்பு முறிவு காய்ச்சல் என்பார்கள்.

வாந்தி, குமட்டல், தோலில் சிவப்பு புள்ளிகள் ஆகியவை சாதாரண அறிகுறிகளாகும். கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, மூக்கில் இருந்து ரத்தம் வருதல், கருப்பு நிற மலம், அதிக தாகம், மயக்கம், அதிக சோர்வு, அமைதியின்மை ஆகியவை ஆபத்தான அறிகுறிகளாகும். உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.

காய்ச்சல் குறைந்த பிறகு தான் ஆபத்து அதிகம். காய்ச்சல் குறைந்த 2-3 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுயமாக ஆஸ்பிரின், இபுபுரூபன் போன்ற மாத்திரைகளை எடுக்க கூடாது.

தண்ணீர் தேங்க விடாதீர்கள்

வீட்டில் தண்ணீர் தொட்டி, பூந்தொட்டி, கூலர், பக்கெட், டயர், தேங்காய் ஓடு, பாட்டில், பிளாஸ்டிக் கப் என எங்கும் தண்ணீர் தேங்க விடாதீர்கள்.வாரம் ஒரு முறை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து மூடி வையுங்கள். டெங்கு கொசு சுத்தமான தேங்கிய தண்ணீரில்தான் உற்பத்தியாகும், பகலில் தான் கடிக்கும்.

கொசு வலை

கை, கால் முழுவதும் மூடும் ஆடை அணியுங்கள்.கொசு விரட்டி, கொசு வலை பயன்படுத்துங்கள். குழந்தைகளை பகலில் கூட கொசுவலையில் தூங்க வையுங்கள். ஜன்னல்களில் கொசு வலை பொருத்துங்கள்.

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யுங்கள்.நிறைய தண்ணீர், இளநீர், ஒ.ஆர்.எஸ்., கஞ்சி குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுக்காதீர்கள்.

X