

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள ரேசன் கடைகளிலும் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சேலை ரோட்டில் ரேசன்கடை உள்ளது. இந்த கடையில் ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் அரிசிகள் வண்டுகள் அரித்தும் தர மற்றதாவும் உள்ளது.
இதனால் ரேசன் அரிசியை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இது பற்றி ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்கும் போது தினந்தோறும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இதேபோல் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள ரேசன் கடைகளிலும் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகு மக்கள் கூறும்போது, எங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி தர மற்றும், வண்டுகள் அரித்தும் காணப்படுறது.
இது குறித்து கடைக் காரர்களிடம் கேட்டால், எங்களுக்கு வருவது இந்த அரிசி தான் என்று கூறு கின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.