

சென்னையில் நடைபெற்ற மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட கலந்துரையாடல் நிகழ்வில், இந்திய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்து அவர் பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்
தங்களின் சிறந்த எதிர்காலத்திற்காக மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும், கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் ஊழலை ஒழிக்கவும் தேவையான அனைத்தையும் செயல்படுத்துவோம் என உறுதியளித்தார்
இது குறித்து மாணவர்களிடையே அவர் பேசியதாவது
தமிழ்நாட்டில் இரண்டு பேராளுமைகள் திருவள்ளுவர், பெரியார் கேள்வி கேட்பதுதான் எல்லாவற்றிற்க்கும் அடிப்படையாக இருக்கிறது என்று தமிழகத்திற்கு எதிரான பாஜகவின் திட்டங்களை பட்டியலிட்டு மாணவர்களிடையே உரையாடினார்.மேலும் வடசென்னை மாணவியிடம் உரையாடிய போது மாணவியின் அழைப்பை ஏற்று நான் நிச்சயம் வடசென்னைக்கு வருவேன் என்று உறுதியளித்தார்
தெருவில் நீங்கள் காண்பதும் ,கைகளில் இருப்பதும்தான் கேள்விகளை கேட்பதற்கான அடிப்படை.கேள்வி கேட்கும் உரிமையையும், வாக்களிக்கும் உரிமையையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வில் உயிர்நீத்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் ராகுலிடம் உரையாடினார்.அவர் முன்னெடுத்திருக்கும் நீட் ஒழிப்பு இயக்க பாதகையிலும் ராகுல்காந்தி கையெழுத்திட்டார்.
இந்தியை திணிப்போம் என மாணவர்களிடையே வெளிப்படையாக சொன்னவர் அமித் ஷா, தமிழ் வழிக் கல்வி பயில்வோர் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. தமிழ் கலாச்சாரம் , மொழி, வரலாறு ,பாரம்பரியம் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் .தொகுதி மறுவரையறை வந்தால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை கேட்காமல் செய்துவிடும்.
புதிய விஷயங்களை அறிவதற்கான தேடலே நமது ஒவ்வொரு செயலுக்கும் அடித்தளமாக அமைகிறது . புதிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் ரூ 3,300 கோடியை விடுவிப்போம் என்கிறது பாஜக அரசு, மோடி அமித்ஷாவை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.