

50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், வரிப் பணத்தை செலுத்தினால் மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. 2026-27 வீட்டு வரி குடிநீர் வரி செலுத்த நகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரம் மூலம் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. வரிசெலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கால அவகாசம் கொடுக்கபட்டும் ஏராளமானோர் வரி செலுத்தாமல் உள்ளனர். இதையடுத்து வரி செலுத்தாத வீடுகள், கடைகளுக்கு குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், வரிப் பணத்தை செலுத்தினால் மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.