

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 4095 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 34 சதவீதம் ஆகும்.
வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் சென்னையில் குடிநீர் தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும் குடிநீர் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் வெறும் 592 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து 530 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.