மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று 44-வது நாளாக தண்ணீர் திறப்பு

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மேட்டூர் அணை
Published on: 
Summary

கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று 44-வது நாளாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று 44-வது நாளாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 59.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 787 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 24.37 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com