ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on: 
Summary

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

ஒகேனக்கல்

இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர்

இதே போல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.44 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2514 கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 36.63 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com