ஒரகடம்-வாலாஜாபாத் சாலை குண்டும் குழியுமாக மாறியது: வாகன ஓட்டிகள் அவதி

சாலையை முழுவதுமாக சீரமைக்க வேண்டும் என்று என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஒரகடம்-வாலாஜாபாத் சாலை குண்டும் குழியுமாக மாறியது: வாகன ஓட்டிகள் அவதி
Published on: 
Summary

ஒரகடம் பகுதியில் இருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் கண்டிகை கூட்டுரோடு பகுதியில் சாலை முழுவதும் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

தாம்பரம்- வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்துக்கு முக்கியமான இந்த சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் ஒரகடம் பகுதியில் இருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் கண்டிகை கூட்டுரோடு பகுதியில் சாலை முழுவதும் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இருசக்கர வாகனம்

இப்பகுதி முக்கிய சந்திப்பாக உள்ள நிலையில் அவ்வழியே வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தினந்தோறும் சாகச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை பள்ளங்களில் ஏறி இறங்கும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறை

இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும்போது நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் அவ்வப்போது தற்காலிகமாக மண், கற்களைகொண்டு பள்ளங்களை மூடுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

மழை

தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சாலை பள்ளங்களில் நிரப்பப்பட்ட மண் கரைந்து மீண்டும் பெரிய அளவில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலையை முழுவதுமாக சீரமைக்க வேண்டும் என்று என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X