சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களால் எந்த உணவையும் சாப்பிட முடிவதில்லை. வாய் கசப்புடன் சாப்பாடே வேண்டாம் என்கிற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
Published on
Summary

தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது.

சென்னையில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள்.

சென்னையின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஏப்ரல், மே மாதங் களை போன்று பகலில் வெயில் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் மழை காலம் போன்று காணப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் அந்த சுவடே தெரியாத அளவுக்கு பகலில் வெயில் வாட்டுகிறது.

காய்ச்சல் பாதிப்பு

இப்படி கால நிலை மாற்றம் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது.

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களால் எந்த உணவையும் சாப்பிட முடிவதில்லை. வாய் கசப்புடன் சாப்பாடே வேண்டாம் என்கிற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

5 நாட்கள் வரை

இந்த காய்ச்சல் 5 நாட்கள் வரை நீடிப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மனநல, சுகாதார இயக்குனரும், குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் எஸ்.எம். பதூர் மொய்தீன் கூறும் போது, காய்ச்சல் பாதிப்பை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. எச்1என்1 என்ற வைரஸ் பாதிப்பால் ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலோ அதன்மூலம் மற்றவருக்கும் எளிதாக பரவி விடுகிறது. எனவே காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக கவசங்களையும் அணிந்து கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த காய்ச்சல் எளிதில் தொற்றி கொள்கிறது. ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டால் மற்றவர்கள் தற்காப்புக்காக டாக்டர்களின் அறிவுரையுடன் காய்ச்சல் மாத்திரைகளை உட்கொள்ளலாம் என்றார்.

மாணவ-மாணவிகள்

இந்த காய்ச்சல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய கிளினிக்குகளிலும் நோயாளிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டே அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com