விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை.. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!

விமான கட்டணம் விலை உயர்வால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Ganesh Chaturthi,flight ticket
Published on

விடுமுறை

விநாயகர் சதுர்த்தி விழாவானது வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி வார இறுதி நாட்களையும் சேர்த்து மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி நாளை குடும்பத்தினருடன் கொண்டாட வெளி ஊர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

உயர்வு

தொடர் விடுமுறையை ஒட்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், திருச்சி, கோவை, பெங்களூர், ஹைதராபாத், தூத்துக்குடி, மதுரை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில் பயணக்கட்டமானது பல மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையிலிருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, மும்பை, பெங்களூரு டெல்லி, செல்லும் விமானங்களின் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உயர்த்துள்ளது. இந்த விலை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com