செல்வாக்குமிக்க நபர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை விசாரிப்பது கடினம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்தபோது, ​​நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வாறு தெரிவித்தார்.
Madras High Court
Published on

சாத்தியமற்றது

இந்த நாட்டில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது.

விசாரணை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் வழக்கில் வேலுமணியுடன் சேர்த்து தொடர்புடைய மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு

இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதில், வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசு அனுப்பிய விளக்கம் கடிதம் ஜூலை 28-ம் தேதி கிடைக்கப் பெற்று அதன்மீது பரிசீலனை நடந்து வருகிறது என்று விளக்கம் அளித்திருந்தது.

தமிழக அரசு

இதற்கு தமிழக அரசின் பதிலாக இது தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அதிருப்தி

இந்த நிலையில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு அதிகமான சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது இதற்குபின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான் தெரியும் என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் வழக்கில் தற்போதையை நிலை என்னவென்று காணொலி வாயிலாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com