விளாத்திகுளம் அருகே பள்ளிக்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவன் மாயம்

மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் அருகே பள்ளிக்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவன் மாயம்
Published on: 
Summary

சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொது மக்களிடமும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட ரெகுராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் ஜீவா (வயது13).

8-ம் வகுப்பு மாணவன்

இவன் தூத்துக்குடியில் உள்ள காரப்பேட்டை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததுடன், அங்குள்ள சமூக நீதி விடுதியிலும் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தான்.

கடந்த 30-ந்தேதி ஜீவா வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். அதன் பின்னர் அவன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. சிறுவன் எங்கு சென்றான், என்ன ஆனான் என்பது குறித்த விவரங்கள் தெரியாததால், அவனது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மகனை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்ததுடன், சுற்று வட்டார கிராமங்களிலும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். இருப்பினும், சிறுவன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

போலீசில் புகார்

இதுகுறித்து சிறுவன் ஜீவாவின் பெற்றோர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது தவித்து வரும் பெற்றோர், தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொது மக்களிடமும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காணாமல் போன சிறுவன் ஜீவா குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, சிறுவனை பாதுகாப்பாக மீட்க உதவ வேண்டும் என குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X