சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம்: பெரியார் பிறந்த நாளில் முதலமைச்சர் விஜய் உறுதிமொழி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கைகளை வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன் என முதல்வர் விஜய் உறுதிமொழி எடுத்தார்.
Periyar Birth Anniversary Pledge
Published on
Summary

சென்னை தலைமைச் செயலகத்தில் பெரியாரின் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தார்.

தமிழ்நாட்டில் இன்று பெரியாரின் 147வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களுடன் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தார். அப்போது,

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்.

சுயமரியாதையும், ஆளுமை திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்து கொள்வேன்.

மானுடத்தின் மீது பற்றையும், மனிதபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்”.

இவ்வாறு முதலமைச்சர் உறுதிமொழி எடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com