மீண்டும் நடிக்க வரும் விஜய் - ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி

'ஜனநாயகன்' திரைப்படம் தான் தனது கடைசி படம், என்று அறிவித்தார்.
மீண்டும் நடிக்க வரும் விஜய் - ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி
Published on: 
Summary

முதலமைச்சர் விஜய் மீண்டும் நடிக்க உள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் தவெக கட்சியை தொடங்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக உருவெடுத்துள்ளார்.

கடைசி படம்

இதனால் எச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக அவர் ஜனநாயகன் படத்துடன் அவரின் திரை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே, 'ஜனநாயகன்' திரைப்படம் தான் தனது கடைசி படம், என்று அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு சோகமான தகவலாகவே அமைந்தது.

மீண்டும் நடிப்பு

அவர் மீண்டும் நடிக்க மாட்டாரா? என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக தகவலொன்று வெளியாகி உள்ளது.

தமிழக அரசு சார்ந்த ஒரு விளம்பரத்தில் விஜய் நடிக்க போவதாகவும், இந்த விளம்பரத்தை கவுதம் மேனன் இயக்க போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசு விளம்பரத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

X