வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
Minister Keerthana- TN CM Vijay
Published on

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.

சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தவெக அரசு ஆட்சியமைத்து முதன்முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

100 நாட்களுக்குள் தவெக அரசு ஒரு லட்சம் கோடிக்கு மேல் தொழில்துறையில் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமாகிறது.

அமைச்சர் கீர்த்தனா

தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com