

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு இடைத்தேர்தலின் வெற்றி விஜய் அண்ணனின் 4 மாத நல்லாட்சிக்கான வெற்றி. தமிழக முதல்வருக்கான வெற்றி. மாற்றத்தை விரும்பி 2026 பொதுத்தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். அதிமுக கட்சியில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர். அதனடிப்படையில் இன்று இரண்டு சட்டசபை தேர்தலுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தவெக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக மக்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்து, நல்லாட்சி வரும் காலத்தில் தொடரும். தமிழகத்தில் மாற்றத்திற்கான அரசாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுக தலைவர் அதிமுக தலைவரையும், அதிமுக தலைவர் திமுக-வை புகழ்ந்து பேசும் வகையில்தான் இருந்தது. எங்கேயாவது எடப்பாடி, திமுக-வை பற்றி பேசியதையோ, மு.க. ஸ்டாலின் அதிமுக-வை பற்றி பேசியதையோ பார்த்தோமா?. இரண்டு கட்சிகளும் தமிழகத்திற்கு விரோதம் என்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வரும் தேர்தல்களில் இருவரும் என்ன பேசினாலும் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
அதிமுக 3-வது இடத்திற்கு சென்றது, எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியை 9 ஆண்டுகளாக கொண்டு வந்த நிறுத்திய லட்சணம். ஸ்டாலினையும், உதய நிதியையும் ஆட்சியில் கொண்டு வந்து அமர வைக்க வேண்டும் என்று பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். இவரை நம்பி அதிமுக-வினர் எப்படி போவார்கள்.