துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்து செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
Published on
Summary

இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகிறார். கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்தியா வால்வ்ஸ்-2026 தேசிய கல்வி கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.

அதன் பிறகு மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்து செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளை போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு மண்டலமாக அறிவித்து டிரோன் கேமராக்கள் பறப்பதற்கும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டர்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட தடை செய்யப்பட்ட ஆணை நடை முறையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com