துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை- போக்குவரத்து மாற்றம்

நீலாங்கரையில் இன்று மாலை நடைபெறும் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி. மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை- போக்குவரத்து மாற்றம்
Published on: 
Summary

சென்னையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றும் நாளை காலை 8 மணி முதல் 10.30 மணி வரை சில வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 42-வது ஆண்டு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.

மேலும் அவர், நீலாங்கரையில் இன்று மாலை நடைபெறும் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி. மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.

போக்குவரத்து மாற்றம்

இந்த நிலையில் அவரது வருகையையொட்டி அவர் செல்லும் வழித்தடங்களில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரையில் போக்குவரத்து மாற்றங்களுடன் பூஜ்ஜிய போக்குவரத்து நடைமுறை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளையும் சென்னையில் இருக்கிறார். இதையொட்டி நாளை காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X