

காவல் உதவி ஆய்வாளர் ராஜாவை தள்ளிவிட்டு தப்பியோட முயன்ற கொலையாளி பூவரசனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ஞானவேல் என்பவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பூவரசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று பூவரசன் ஞானவேலை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதையடுத்து கொலை வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பூவரசனை போலீசார் கைது செய்தனர்.
கொலை நடந்த இடத்தில் பூவசரன் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை பறிமுதல் செய்ய அவரை போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.
காவல் உதவி ஆய்வாளர் ராஜாவை தள்ளிவிட்டு தப்பியோட முயன்ற கொலையாளி பூவரசனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
இந்நிலையில், காயமடைந்த எஸ்ஐ ராஜா மற்றும் காலில் சுட்டுப்பிடிக்கப்பட்ட கொலையாளி பூவரசனுக்கு குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.