பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்- பொதுமக்கள் அவதி

ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்பட்டு வரும் வாகனங்களால் பேருந்து நிலையம் டூவீலர் ஸ்டாண்ட் ஆக மாறி வருகிறது.
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
Published on: 
Summary

பாலக்கோடு பஸ்நிலையத்தில் அரசு, தனியார் பேருந்துகள் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதே இடத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் ஒழுங்கின்றி நிறுத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான பயணிகள், மாணவர்கள் தினமும் சிரமம் அனுபவிக்கின்றனர். காலை வாகனம் நிறுத்தி இரவு எடுக்கும் பழக்கம், ஆங்காங்கே நிறுத்தும் டூவீலர்கள் காரணமாக நிலையம் குழப்பமடைந்து விபத்து அபாயம் உருவாக, அரசு உடனடி சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் டூவீலர்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. நகர மக்கள் புறநகர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சென்னை, கோவை, சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அவதி

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளுக்கு இடையில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும், பேருந்து நிலையத்தில் காலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் சென்று இரவு வாகனத்தை எடுத்து செல்லுவதால் பொதுமக்களுக்கும், பேருந்துகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினர் கண்டுகொள்ளதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்பட்டு வரும் வாகனங்களால் பேருந்து நிலையம் டூவீலர் ஸ்டாண்ட் ஆக மாறி வருகிறது. இதனால் காலை, மாலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அதிக அளவில் இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com