உடல்நலக்குறைவு- அடையாறு வீட்டில் கி.வீரமணி ஓய்வு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அடையாறில் உள்ள வீட்டில் கி.வீரமணி ஓய்வு எடுத்து வருகிறார்.
உடல்நலக்குறைவு- அடையாறு வீட்டில் கி.வீரமணி ஓய்வு
Published on

சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்கும் விதமாக சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பேசுகிறார். நாகை மாவட்டம் திருமருகல் மற்றும் காரைக்காலில் நேற்று நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டத்தில் பேச இருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். அடையாறில் உள்ள வீட்டில் கி.வீரமணி ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து உரிய ஆலோசனையை வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com