வண்டலூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.
வண்டலூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி
Published on: 
Summary

விபத்து தொடர்பாக லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த வேலு என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள புதிய மேம்பாலத்தில் அவர் சென்றபோது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விபத்து

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார்

விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விபரங்களை சேகரித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த வேலு என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com