தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்: வைஷ்ணவி சர்மா சாதனை

19-வது ஓவரில் வைஷ்ணவி சர்மா இந்த சாதனையைப் படைத்தார்.
வைஷ்ணவி சர்மா
வைஷ்ணவி சர்மா
Published on: 

மகளிருக்கான இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் மத்திய பிரதேசம்- ஆந்திர பிரதேசம் அணிகள் மோதின.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த வைஷ்ணவி சர்மா, முதல் மூன்று ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

4 பந்துகளில் 4 விக்கெட்

தனது கடைசி ஓவரான 4-வது ஓவரை 19-வராக வீசினார். முதல் இரண்டு பந்துகளில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதன்பின் அடுத்த நான்கு பந்துகளிலும் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதன்மூலம் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2022-ம் ஆண்டு ஹுமைரா காஜி சவுராஷ்டிராவுக்கு எதிராக தொடந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

எளிதாக சேஸிங்

வைஷ்ணவி சர்மா 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்த ஆந்திரா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. பின்னர் மத்திய பிரதேசம் எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

சமீப காலமாக சிறப்பான பந்து வீச்சு

சமீபத்தில் இந்திய அணிக்காக ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3-வது போட்டியில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்தியா `ஏ' அணிக்காக 3 ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதிகாரப்பூர்வமற்ற ஒரு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

X