

தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிகள் கட்சிசார்பாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்தை மார்க்சிஸ்ட் தலைவர் பெ சண்முகம் பேசியதாவது
தேர்தல் ஆணையத்தினுடைய இரண்டு ஆணையர்கள்,தேர்தல் ஆணையத்தில் எவ்வளவு பெரிய மோசடி நடந்துக்கொண்டிருக்கிறது, ஆளும் கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளையாக தேர்தல் ஆணையம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருகிறார்கள்.
தேர்தல் ஆணையர் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகத்தை இழைத்திருக்கிறார்.தகுதியான அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதும், சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டுவதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமையாகும். ஆனால் தேர்தல் ஆணையர் வாக்குரிமையை பறிப்பது, மோசடியாக வாக்களிப்பது பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு இந்திய நாட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ளனர்.
ஆகவே ஒரு நிமிடம் கூட இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் நீடிப்பதற்கான எந்த அருகதையும் இல்லை.அவர் உடனடியாக பதிவியில் இருந்து விலக வேண்டும் என்பதே இடது சாரி கட்சிகளின் முக்கியமான கோரிக்கை என்று தெரிவித்துள்ளர்.
இதைதான் திமுக,காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இதே கோரிக்கையை தான் வலியுறுத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
திமுகவின் செய்திதொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், தேர்தல் அதிகாரி பதவி விலக வேண்டும் என்று நடைபெற்றன்இண்டிய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்றவில்லை என்றாலும் ,அந்த கோரிக்கையில் உடன்படுகிறோம் என்றும் பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் வரும்போது திமுக தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் திமுக உடனிருக்கும் என்று கூறியிருந்தார். திமுகவின் இந்த கருத்தை இடதுசாரிகள் வரவேற்பதாக பெ.சண்முகம் தெரிவித்தார்.
வாக்குரிமையை நிலைநாட்வது,வாக்கு உரிமையை இழந்த மக்களுக்கு வாக்குரிமையை பெற்று தருவது என நியமான கோரிக்கைக்காக நடைப்பெற இருக்கும இண்டியா கூட்டணி கூட்டயின் அடுத்த கட்ட போராட்டஙக்ளில் திமுக பஙகேற்றக வேண்டும் என்று திமுக தலைவர்களை கேட்டுக்கொள்வதாக கூறினார். மேலும் வாக்குரிமையை நிலைநாட்ட விரும்பும் அனைத்து ஜனநாயக சக்திகளும் போரட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.