உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
Published on: 
Summary

போலீசார் அந்த லாரிகளில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வரப்படுவதாக சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கூழாங்கற்கள்

தகவலின் பேரில் சுரங்கத்துறை அதிகாரி ரகுநாத் குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை விமான நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 லாரிகள் வந்தன.

அந்த லாரிகளை அதிகாரிகள் சோதனைக்காக நிறுத்த முயன்றனர். ஆனால் லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

மடக்கி பிடித்தனர்

உடனடியாக சுரங்கத்துறை அதிகாரி ரகுநாத் குமார் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அந்த லாரிகளை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர்கள் 2 பேரும் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.

லாரிகள் பறிமுதல்

இதையடுத்து போலீசார் அந்த லாரிகளில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தியவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com