

திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
போலீசார் கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டபோது உதயநிதி கூறியதாவது:
* என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்.
* திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
* பேசாத ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
* விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது.
* திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான்.
* நீதிமன்றத்தின் முடிவுக்கு தலை வணங்குகிறேன். சட்டப்படி சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதயநிதியை கைது செய்து அழைத்து செல்லும் வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர்.