உதயநிதி கைது எதிரொலி - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

பேசாத ஒன்றைப் பேசியதாக பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை.
MK Stalin
Published on

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் விரைந்து வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளனர். இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும்.

பேசாத ஒன்றைப் பேசியதாக பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை. இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பயந்து செய்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சி தலைவரை அச்சுறுத்த முடியாது. உதயநிதி ஸ்டாலின் கைது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com